இந்த ஆண்டுக்கான சிறந்த அரசியல் நகைச்சுவை ? தமிழ் அரசியல்வாதிகள்
நாட்டி புரட்டிபோட்ட டித்வா புயலால் பெரும் அனர்த்தை எதிர்கொண்வர்கள் மலைய மக்களே. பேரனர்த்ததில் பாதிக்கபப்ட்ட மலையக மக்களை ஜனாதிபதி அனுர குமார நேரில் சென்று சந்தித்தடன் , மலைய மக்களுக்கு புது நம்பிக்கையையும் அளித்ததோடு, துரித கதியில் சீரமைப்பு பணிகளும் மலையகத்தில் முன்னெடுக்கபப்ட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழ அரசியல்வாதிகளும் அங்கு வா, இங்கு வா என அதர்த்ததில் அரசியல் செய்யும் சம்பவங்களும் நடந்தேறி கொண்டிருக்கின்றது.
இது தொடர்பில் சமூக வலைத்தளத்தில் நபர் ஒருவரின் பதிவில்,

தமிழ் அரசியல்வாதிகளுடன் எவராலும் மோத முடியாது!
வேறு எந்த நாட்டிலாவது, இப்படியொரு விடயம் இருக்குமென்று நான் கருதவில்லை – நான் ஆராய்ந்தும் பார்க்கவில்லை. வேறு எவரும் செய்ய முடியாததை செய்தால்தானே நாங்கள் வல்லவர்கள்!
ஓவ்வொரு ஆண்டும், அந்த ஆண்டில் சிறந்த அரசியல் நகைச்சுவையாளர் யார் என்று விருது வழங்கினால், நிச்சயமாக அந்த விருதை, தமிழ் அரசியல்வாதிகள் என்போர்தான் அதிகளவில் பெறுவார்கள்.
அந்த விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகளுடன் எவராலும் மோத முடியாது! ஏனெனில் அனைத்து அரசியல் நகைச்சுவையாளர்களும் தமிழ்ச் சூழலில்தான் இருக்கின்றனர். சில நாட்களாக மலையக தமிழ் மக்களுக்காக கண்ணீர் சிந்துவதான ஒரு தோற்றத்தை சிலர் காண்பித்துவருகின்றனர்.
அரசியல் அரங்கிற்கு வெளியில் உள்ளவர்கள் மனிதாபிமான அடிப்படையில் பேசுவது என்பது வேறு - ஆனால் தமிழ்த் தேசிய அரசியலை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்வோர் மலைய மக்களின் மீட்பர்களாக தங்களை காண்பித்துக்கொள்வதுதான் நகைப்புக்கிடமானது. ஏனெனில் இவர்களை நம்பிய சொந்த மக்களுக்கே இவர்களால் எதனையும் உருப்படியாக செய்யமுடியவில்லை – அதிகம் பேசி அழிந்ததே மிச்சம். சமஸ்டி என்று சொல்லி, 76 வருடங்கள் போய்விட்டது.
இந்தக் காலத்தில் 15 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். எப்படியாவது வெளிநாட்டுக்கும் போய்விட வேண்டும், நாங்கள் போகாவிட்டாலும் எப்படியாவது ஒரு பிள்ளையாவது அனுப்பிவிட வேண்டும் என்பதுதான் ஈழத் தமிழ் மத்தியதரவர்க்க கனவு.
ஒரு வேளை, வடக்கு கிழக்கில் வாக்களிப்பதற்கு ஆட்கள் தேவை, அந்த இடத்திற்கு மலைய தமிழ் மக்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணுகின்றார்களோ தெரியவில்லை.
பேரனர்த்தம் காலத்திற்கு காலம் வரும் - அப்போது ஈழத் தமிழர்களை பாதுகாப்பது எப்படி என்னும் திட்டம் எவரிடமாவது உண்டா? இன்னும் பாரிய அழிவுகளை சந்திக்க வேண்டிவரும் என்று ஜ.நா.எச்சரிக்கின்றது. இந்த நிலையில் இன்னொரு பேரழிவின் போது வடக்கு கிழக்கில், இலகுவில் பாதிக்கக் கூடிய மக்களை பாதுகாப்பதற்கான திட்டம் இருக்கின்றதா?
உதாரணமாக திருகோணமலை மூதூர் பகுதியை எடுத்துக் கொண்டால், வெள்ளம் பெருக்கெடுக்கும் போது, இப்போது எந்தப் பகுதிகளெல்லாம் பாதிக்கப்பட்டதோ, அவைகள் மீண்டும் பாதிக்கப்படும்.
அவ்வாறான நிலைமையின் போது, முன்னெச்சரிக்கையுடன் எவ்வாறு மக்களை பாதுகாப்பது என்னும் திட்டம் இருக்கின்றதா? உண்மையில் வடக்கு கிழக்கிலுள்ள சில பகுதிகளிலுள்ள தமிழ் மக்களை மேட்டுப் பாங்கான பகுதிகளில் குடியேற்ற வேண்டியிருக்கின்றது – அல்லது அனர்த்த பாதுகாப்பு இடங்கள் என்னுமடிப்படையில் மேட்டுப்பாங்கான இடங்களை அடையாளம் கண்டு, அவற்றில் சில நாட்கள் தங்குவதற்கான திட்டங்கள் இருக்க வேண்டும்.
இது பற்றித்தான் ஈழத் தமிழ் அரசியல் சமூகத்தினர் முதலில் சிந்திக்க வேண்டும். எந்தவொரு மக்கள் கூட்டத்திற்கும் இன்னொருவர் மீட்பராக முடியாது – ஒருவர் மீது மனிதாபிமானத்தை இன்னொருவர் காண்பிக்கலாம் ஆனால் அவர்களது எதிர்காலம் என்பது, அவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் தலைமைகளின் பொறுப்பாகும்.
மலையகத்தில் தலைமைகள் உண்டு. அவர்கள் அவர்களுடைய மக்களைப் பார்த்துக் கொள்ளட்டும். ஒரு வேளை தலைமைகள் சரியில்லை என்றால், புதிதாக சிந்திக்க வேண்டிய பொறுப்பும் அந்த மக்களுக்குரியதுதான்.
நட்புடன் யதீத்திரா