செவ்வாய் பெயர்ச்சி; இந்த ராசிக்காரர்களுக்கு இனி பொற்காலம் தான்
நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார் மற்றும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அந்த வகையில் செவ்வாய் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நட்சத்திரத்தை மாற்றவுள்ளார்.
அதுவும் செப்டம்பர் 02 செவ்வாய் புனர்பூசம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான். செவ்வாயின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் விளைவு 3 ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும்.

அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
மேஷம் : நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரக்கூடிய புதிய மற்றும் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மேலும் இக்காலத்தில் எந்த வேலையை செய்தாலும், அதில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும்.
தனுசு : மன தைரியம் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பான செயல்திறன் காரணமாக பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மேலும் வருமானத்தில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதோடு எடுத்த வேலை ஒவ்வொன்றிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
மிதுனம் : குறிப்பாக வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பல வழிகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வேலைகள் ஒவ்வொன்றையும் சிறப்பாகவும், வெற்றிகரகமாகவும் செய்து முடிப்பீர்கள். மொத்தத்தில் செவ்வாயின் அருளால் நிதி நிலைமை வலுவடையும்.