11 புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிழ் கையளிப்பு
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 07 வெளிநாட்டு தூதுவர்களும் 04 உயர்ஸ்தானிகர்களும் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்.
இந்த புதிய இராஜதந்திரிகள் முறையே பிரேசில், பங்களாதேஷ், சீனா, ஒஸ்திரியா, அமெரிக்கா, டொமினிகன் குடியரசு, கானா, புரூணை தாருஸ்ஸலாம், சூடான், கயானா மற்றும் பனாமா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

அதன்படி, இன்று ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்த புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் பின்வருமாறு,
தூதுவர்களாக:
Jorge Geraldo Kadri - பிரேசில் கூட்டாட்சிக் குடியரசின் தூதுவர், Wei Huaxiang - சீன மக்கள் குடியரசின் தூதுவர், கலாநிதி Robert Zischg - ஆஸ்திரிய குடியரசின் தூதுவர், Eric S. Meyer - அமெரிக்கத் தூதுவர், Francisco Manuel Comprés Hernández - டொமினிகன் குடியரசின் தூதுவர், கலாநிதி Mohammed Abdalla Ali Eltom - சூடான் குடியரசின் தூதுவர், Nubiela Yanarith Ayala - பனாமா குடியரசின் தூதுவர்
உயர்ஸ்தானிகர்களாக
D.M. Salahuddin Mahmud - பங்களாதேஷ் குடியரசின் உயர்ஸ்தானிகர், பேராசிரியர் Kwasi Obiri-Danso - கானா குடியரசின் உயர்ஸ்தானிகர், Siti Arnyfariza Md Jaini - புரூணை தாருஸ்ஸலாமின் உயர்ஸ்தானிகர், Dharamkumar Seeraj - கயானா கூட்டுறவு குடியரசின் உயர்ஸ்தானிகர்