விடுதிக்குள் வீசிய துர்நாற்றம் ; அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம் ; மர்ம மரணத்தால் பரபரப்பு
அம்பலாங்கொட நகரின் நடுப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் ஒருவரின் சடலம் நேற்று (25) நண்பகல் மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்டவர் அம்பலாங்கொட மகா பன்சல வீதியில் உள்ள விடுதியில் தனியாக தங்கியிருந்த 67 வயதுடையவர் என கண்டறியப்பட்டுள்ளது.

தீவிரமாகும் விசாரணை
இவர் பெந்தோட்டை சுற்றுலா விடுதி ஒன்றில் சிற்றுண்டி தயாரிப்பாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நபரின் உடலம் கண்டெடுக்கப்பட்டபோது, அது மிகவும் அழுகி, வீங்கி, துர்நாற்றம் வீசியதாகத் தெரிவித்த காவல்துறை, இவர் சுமார் ஐந்து நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறது.
குறித்த நபர் தங்கியிருந்த அறையில் இருந்து அதிக துர்நாற்றம் வீசியது தொடர்பாக அயலவர் ஒருவர் மேற்கொண்ட சோதனையின்போதே இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.