தகாத உறவிலிருந்தவருடன் சேர்ந்து மனைவி செய்த சம்பவம்; மதுபோதையில் அரங்கேறிய கொடூரம்
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, அவரது உடலை வீட்டின் அருகே புதைத்ததாக மனைவி உள்பட 2 பேரை 24 மணி நேரத்திற்குள் குற்றப்பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.
கணவருடன் அடிக்கடி தகராறு அரியானா மாநிலம் பரீதாபாத்தில் வசித்து வந்தவர் 42 வயதுடையவரின் மனைவிக்கும் காமத் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கொலை செய்ய திட்டம்
இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்தநிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து, மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி, கணவருக்கு அதிக அளவில் மது குடிக்க வைத்துள்ளார். கணவர் மதுபோதையில் இருந்தபோது, அவரது தலையில் ‘இன்டர்லாக்’ கல்லால் தாக்கி காமத் கொலை செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பின்னர், கொலையை மறைக்க சியாம்வீரின் உடலை வீட்டின் அருகே இருவரும் சேர்ந்து புதைத்துள்ளனர்.இதையடுத்து இருவரையும் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.