இந்திய குடியுரிமையை கைவிடும் மக்கள் தொகை அதிகரிப்பு
இந்திய குடியுரிமையை கைவிட்டு, வெளிநாட்டு குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்துள்ளதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டும் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை கைவிட்டு வௌிநாடுகளில் குடியேறியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மூன்றாவது ஆண்டாக இரண்டு இலட்சத்தை தாண்டியுள்ளது
இந்த எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இரண்டு இலட்சத்தை தாண்டியுள்ளது இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் இதனைக் குறிப்பிட்டார்.
புள்ளிவிவரங்களின் படி, 2024 ஆம் ஆண்டில் 2,06,378 பேர் இந்திய குடியுரிமையை கைவிட்டுள்ளனர்.
2020 ஆம் ஆண்டில் 85,256 பேரும், 2021 ஆம் ஆண்டில் 1,63,370 பேரும், 2022 ஆம் ஆண்டில் 2,25,620 பேரும், 2023 ஆம் ஆண்டில் 2,16,219 பேரும் தங்கள் குடியுரிமையை கைவிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இரு மடங்காக அதிகரித்துள்ளது. 2011 மற்றும் 2014 க்கு இடையில், சுமார் 1.2 இலட்சம் பேர் மட்டுமே தங்கள் குடியுரிமையை துறந்தனர்.
அதேவேளை தற்போது, உலகளவில் 1.71 கோடி பேர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இருப்பதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது