உங்க கால்களில் இந்த அறிகுறி இருந்தால் அலட்சியமா விடாதீங்க: இந்த பிர்ச்சனையாக கூட இருக்கலாம்
நம் கல்லீரலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் வேக்ஸ் போன்ற பொருளாகும். இந்த கொலஸ்ட்ரால் தண்ணீரில் கரையாது மற்றும் சில சமயம் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தை தடுக்கும்போது அதன் எதிரொலியாக உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகப்படியாக இருந்தால் இதய நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது தெரிந்த விடயம் தான். அதே சமயம், கொலஸ்ட்ரால் முற்றிலுமாக தேவையில்லை என்று ஒதுக்கி விடவும் முடியாது.
உயர் அடர்த்தி லிபோபுரோடின் என்னும் ஹெச்டிஎல் கொழுப்பானது நல்ல கொலஸ்ட்ரால் என்று வரையறை செய்யப்படுகிறது. ரத்த நாளங்களில் மிகுதியாக உள்ள கொழுப்புகளை இது மீண்டும் கல்லீரலுக்கு கொண்டு வந்து சேர்க்கிறது. அதன் பிறகு அவை உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
கால்களில் தெரியும் அறிகுறிகள்
நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரித்துள்ளன என்பதை சில அறிகுறிகள் மூலமாக தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக கால்களில் கீழ்காணும் அறிகுறிகள் தெரிய வரும். இவை இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கால் பிடிப்புகள்
உங்கள் கால்கள் அடிக்கடி பிடித்துக் கொள்கின்றன என்றால் உங்கள் உடலில் உள்ள எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவுகளை பரிசோதனை செய்ய வேண்டும் என்று அர்த்தமாகும். கால்களுக்கு செல்லும் ரத்த நாளங்கள் பாதிப்பு அடைந்துள்ளன என்பதன் அறிகுறியாகவே பிடிப்புகள் உண்டாகும்.
குளிர்ச்சியான பாதம்
பொதுவாக மழைக்காலங்களில் நம் பாதங்கள் நீண்ட நேரத்திற்கு குளிர்ச்சியாக இருக்கும். ஆனால், எந்தவித காரணமும் இல்லாமல் மற்ற நாட்களிலும் பாதங்கள் குளிர்ச்சியாக இருப்பின், அது அதிக கொலஸ்ட்ராலுக்கான எச்சரிக்கை ஆகும்.
சரும நிறம் மாற்றம்
கொலஸ்ட்ரால் காரணமாக ரத்த ஓட்டம் குறைய தொடங்கும் நிலையில், நம் கால்களில் சருமத்தின் நிறம் மாறி மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கத் தொடங்கும். நிறம் மாறுவதை ஏதோ சத்து குறைபாடு என்று நினைத்து அலட்சியமாக விட்டுவிட கூடாது.
உணர்வின்மை
கொலஸ்ட்ரால் அதிகரிப்பதன் காரணமாக ரத்த ஓட்டம் குறையும் நிலையில் கால்களில் அடிக்கடி உணர்வின்மை ஏற்படலாம். சட்டென்று எழுந்து நிற்கவும், நடக்கவும் மிகுந்த சிரமம் ஏற்படலாம். அடிக்கடி இந்த பிரச்சினை ஏற்பட்டால் எச்சரிக்கை அவசியம்.
காரணமின்றி கால் வலி
நாம் மிகுதியான பணி அல்லது பயிற்சி செய்கின்ற சமயங்களில் கால்களில் வலி ஏற்படுவது இயல்பானது தான். ஆனால், கொஞ்ச தூரம் நடந்தால் கூட கால்களில் கடுமையான வலி ஏற்படுகிறது என்றால் அது கொலஸ்ட்ராலின் அறிகுறிகள் ஆகும்.
கொலஸ்ட்ராலை குறைக்கும் வழிகள்
அவ்வபோது ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடல் எடை சீரான அளவில் இருப்பது அவசியமாகும். புகைப்பிடித்தல் பழக்கம் இருக்கக் கூடாது.
தினசரி 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இனிப்பு, சோடா, துரித உணவுகள் போன்றவற்றை குறைத்து, காய்கறிகள், பருப்புகள், நார்ச்சத்து உணவுகளை மிகுதியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.