இரு நாட்களுக்கு யாழில் ஜனாதிபதி அநுர
15ஆம், 16ஆம் திகதிகளில் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்க உள்ளார்.
நாளை 15ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணம் வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் வட மாகாண தைப்பொங்கல் விழாவில் பங்கேற்கும் ஜனாதிபதி, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக யாழ்ப்பாண சுற்றுலா சபையால் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தைப்பொங்கல் விழாவிலும் பங்கேற்க உள்ளார். '

முழு நாடுமே ஒன்றாக
தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை' என்ற தொனிப்பொருளின் கீழ் நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் உட்பட, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் இன்னும் வீடுகளின்றி உள்ள 2,500 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் 16 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு யாழ்ப்பாணம், சாவகச்சேரி வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெறும்.
போதைப் பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் வட மாகாண நிகழ்ச்சித் திட்டம் 16 ஆம் திகதி பிற்பகல் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற உள்ளது.