இலங்கையில் தொடரும் அசம்பாவிதங்கள் : ஒரு மாத்தில் இத்தனை உயிரிழப்பா?
நாட்டில் 2025 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 11 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும், இவை தொடர்பில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.
துப்பாக்கிச்சூட்னால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களால் ஐந்து துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், தனிப்பட்ட மற்றும் இதரகாரணங்களால் 6 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர். மேற்படி இரு சம்பவங்கள் தொடர்பிலும் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள பாதாளகுழு உறுப்பினர்கள் 68 பேருக்கு எதிராக சிவப்பு பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மூன்று பேர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர் என எமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாரத்துக்குள் அவர்களை நாட்டுக்கு அழைத்துவந்து, உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.”என்றும் இதன் போது விளக்கமளித்தார்.