மாதத்தின் முதல் நான்கு நாட்களில் இலங்கையில் குவிந்த இந்தியா
2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாத்தின் முதல் நான்கு நாட்களில் 40,054 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இவ்வாண்டின் பெப்ரவரி மாத்தின் முதல் நான்கு நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 5,287 ஆகும்.

மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 5,184 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 3,817 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 2,496 சுற்றுலாப் பயணிகளும், போலந்திலிருந்து 2,364 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 2,312 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸலிருந்து 1,936 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.