இலங்கைக்கு சுற்றுலா வந்து விலைமாதுக்களாக மாறிய வெளிநாட்டு யுவதிகள்!
இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகளாக வருகை தரும் ஈடுபடுவதாக அதிர்ச்சிதரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு ரஸ்யாவிலிருந்து பெருமளவு சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் நிலையில் இவர்களில் சில பெண் சுற்றுலாப்பயணிகள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகின்றது.
உள்வருகை விசா இலவசமாக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியா சீனா ரஸ்யா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்தும் அதிகளவு சுற்றுலாப்பயணிகள் இலங்கையை நோக்கி படையெடுக்கின்றனர்.
மணித்தியாலத்திற்கு 15000 முதல் 45000 வரை
உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் கொரோனா போன்றவற்றினால் மிகமோசமான பாதிப்புகளை எதிர்கொண்ட இலங்கையில் சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்பும் நோக்கில் ரஸ்யா உட்பட ஏழு நாடுகளை சேர்ந்தவர்களிற்கு உள்வருகை விசா தேவையில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் அநராசங்கத்தின் இந்த சலுகையை பயன்படுத்தி தனிநபர்கள் துஸ்பிரயோகம்செய்கின்றதாக கூறப்படுகின்றது. ஜனவரி மாதம் இலங்கைக்கு 208 253 சுற்றுலாப்பயணிகள் வருகைதந்துள்ளனர்.
இவர்களில் சுமார் 32000 பேர் ரஸ்ய சுற்றுலாப்பயணிகள். இதேவேளை இவர்களில் சிலர் பாலியல்தொழிலில் ஈடுபடுகின்றனர் என தெரியவந்துள்ளது. குறிப்பாக கொழும்பில் நட்சத்திர விடுதிகளில் இவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இவர்கள் இரவுவிடுதிகளின் மூலமும் சிலர் முகவர்கள் மற்றும் ஏற்கனவே பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களை தேடிக்கொள்கின்றனர்.
இவர்கள் மணித்தியாலத்தி;ற்கு 15000 முதல் 45000 வரை அறவிடுகின்றனர் என தெரியவந்துள்ளது. சில இணையதளங்கள் இது குறித்து விளம்பரங்களை வெளியிட்டுவருகின்றன ரஸ்ய பெண்கள் அதிகளவிற்கு முக்கிய பிரமுகர்களை இலக்குவைத்தே செயற்படுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த விடயத்தை கையாள்வதில் குழப்பங்கள் உள்ளதாக குடிவரவுகுடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கூறையதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.