தமிழர் பகுதியில் தகாத உறவால் ஐவர்க்கிடையே மோதல்
கிளிநொச்சி – ராமநாதபுரம் பகுதியில் நேற்று (19) இரவு இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
குறித்த மோதலில் இரண்டு ஆண்களும், 3 பெண்களும் காயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணை
அவர்களில் இரண்டு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தகாத உறவினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பின்னர் மோதலாக மாறிய நிலையில், ஆயுதம் ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் 28 முதல் 50 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன் அவர்கள் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் 24, 33 மற்றும் 59 வயதுகளையுடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.