பிரித்தானியா வேண்டாம் ; புதிய போக்கை தேர்வு செய்யும் இலங்கை மாணவர்கள்
பிரித்தானியாவில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-2025 ஆண்டுகளுக்கு இடையில் பிரித்தானியாவில் பயிலும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 6வீதம் குறைந்து 685,565 ஆக பதிவாகியிருந்தது.
2025 இல் முடிவடைந்த ஆண்டில் வழங்கப்பட்ட கல்விக்கான விசாக்கள், 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 31வீதம் குறைந்துள்ளன.

மாணவர்களுடன் வரும் குடும்ப உறுப்பினர்களுக்கான விசாக்கள் 57வீதம் என்ற அளவில் சரிவைக் கண்டுள்ளன.
இலங்கை மாணவர்களின் நிலையை பொறுத்தவரையில், பிரித்தானிய முதுகலை படிப்புகளுக்கான ஆர்வம் கடுமையாகக் குறைந்துள்ளது இதன்படி, இலங்கையில் இருந்து பிரித்தானியாவில் முதுகலை மாணவர் சேர்க்கை 36வீத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
குறிப்பாக, மாணவர்களுடன் தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடையே இந்தத் திடீர் மாற்றத்திற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக, இலங்கை மாணவர்கள் தற்போது கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளை நோக்கி செல்ல தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.