மனித வேலைகளை முந்தும் செயற்கை நுண்ணறிவு ; IT பணிநீக்கம் அதிகரிப்பு
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் ஏற்பட்ட தாக்கம் காரணமாக, இந்தியாவின் முன்னனி தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களின் பங்குச் சந்தை பெறுமதி பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
நிஃப்டி ஐடி பங்குகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் 5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளன.
தற்போது பயன்பாட்டிலுள்ள கூகுள் ஜெமினி, ஓபன் ஏஐ சாட்ஜிபிடி, டீப்சீக் போன்ற பல்வேறு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை நிறுவனங்கள் தமது பணிகளுக்காகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
இதனால், ஏற்கனவே மனிதர்களால் முன்னெடுக்கப்பட்ட பல தொழில்நுட்ப வேலைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், இவ்வாண்டில் மாத்திரம் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 'ஆந்த்ரோபிக்' (Anthropic) நிறுவனத்தின் புதிய 'கிளாவுட் ஏஐ' (Claude AI) அறிமுகமானது இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நிறுவனங்களின் வெளிவாரியான சேவைகளை (Outsourcing Services) இந்தத் தொழில்நுட்பம் மிகத் துல்லியமாகவும், காலத்திற்கு ஏற்றவாறும் சுயமாகவே மேம்படுத்திச் செய்கின்றது.
மனிதத் தலையீடுகள் அவசியமற்ற இவ்வாறான சூழலால் விப்ரோ (Wipro), டி.சி.எஸ் (TCS), இன்போசிஸ் (Infosys) மற்றும் எல் அன்ட் டி (L&T) போன்ற முன்னனி இந்திய நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் கடும் சரிவைச் சந்தித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.