தீபாவளிக்கு பின் உதயமாகும் புதன் ; இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசப்போகுது
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், புதன் தீபாவளிக்கு பின் துலாம் ராசியில் உதயமாகவுள்ளார். அதுவும் இந்த மாற்றமானது நவம்பர் 10 ஆம் திகதி நிகழவுள்ளது. இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த புதன் உதயத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது தீபாவளிக்கு பின் துலாம் ராசியில் உதயமாகும் புதனால் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காணபோம்.

கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்களோ அல்லது பதவி உயர்வோ கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் இக்காலத்தில் கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதுவரை வேலைகளில் தடைகளை சந்தித்து வந்தால், இனி அந்த தடைகள் நீங்கி, வெற்றிகரமாக வேலை முடிவடையும்.

கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. இதுவரை கைக்கு வராமல் சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.

கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்துள்ள முதலீடுகளில் இருந்தும் நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
