கொழும்பிலிருந்து மன்னார் சென்ற பேருந்து விபத்து ; யாழ். பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த தனியார் சொகுசுப் பேருந்து விபத்துக்குள்ளானதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து, கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் சாலியவெவ, 19ஆம் கட்டைப் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 30 வயதுடைய மாணவியே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர் அநுராதபுரம், ரம்பேவ பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த மாணவி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகப் பீடத்தில் கல்வி பயின்று வந்த மாணவி எனத் தெரியவந்துள்ளது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் விபத்துக்கான காரணம் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.