இந்திய விஜயத்தை முடித்து நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர குமார
புதுடில்லியில் நடைபெற்ற 'AI Impact 2026' மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தனது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று (20) இரவு நாடு திரும்பினார்.
ஜனாதிபதி மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் இன்று இரவு 10.04 மணியளவில் இந்தியாவின் புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-196 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

AI Impact 2026
செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த AI Impact 2026 மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது.
ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45 ற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
AI Impact 2026 உச்சிமாநாட்டில் பங்குபற்றியிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உலக நாடுகளின் பல்வேறு தலைவர்களையும் சந்தித்திருந்தமை குறிப்பிடதக்கது.