தமிழர் பகுதியொன்றில் குடும்ப பெண் வீட்டிற்குள் செய்த செயல்
புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியில் 6.5 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட பெண்ணை மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பப் பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது வீட்டில் விற்பனை நோக்கத்திற்காக 6.5 கிராம் கஞ்சா வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் குறித்த பெண் புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் நேற்று (19) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்