நாட்டின் சில பகுதிகளில் கடும் வெப்பம் ; பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தல்
நாட்டின் சில பகுதிகளில் இன்று (29) வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உடனடி உணவுச் சந்தையில் புதிய அத்தியாயம் ; வெண்டிஸ் உணவகத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் ஜோன் கீல்ஸ்
இதன்படி, கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிக வெப்பநிலை காரணமாக உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, அதிக நேரம் நேரடி வெயிலில் இருப்பதைத் தவிர்த்தல், போதுமான அளவு நீர் அருந்துதல், குழந்தைகள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நிலவும் வெப்பமான வானிலை தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.