உடனடி உணவுச் சந்தையில் புதிய அத்தியாயம் ; வெண்டிஸ் உணவகத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் ஜோன் கீல்ஸ்
இலங்கையின் முன்னணி வணிகக் குழுமங்களில் ஒன்றான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (John Keells Holdings), சர்வதேச அளவில் புகழ்பெற்ற உணவக பிராண்டான வெண்டிஸ் (Wendy's) உணவகத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாக அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தனது நுகர்வோர் உணவுத் தயாரிப்புத் தொகுப்பை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்க்கிறது.

இந்த புதிய திட்டத்தின் கீழ், இலங்கையின் முதலாவது வெண்டிஸ் உணவகம் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் திறக்கப்படவுள்ளது.
இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் உடனடி உணவுச் சந்தையில் (Fast food market) தனது நிலையை வலுப்படுத்துவதும், நுகர்வோருக்கு புதிய மற்றும் உயர்தர உணவு அனுபவத்தை வழங்குவதுமே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்று ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.