வழக்கில் சிக்கிய நடிகை தமன்னா ; கைதாகவுள்ள பல பிரபலங்கள்
ஆந்திராவில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான OSR காங்கிரஸ் ஆட்சியில் ரூ. 3500 கோடி (இந்திய ரூபாவில்) அளவில் மதுபான ஊழல் மோசடி நடைபெற்றமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஊழல் தொடர்பாக பிரபல நடிகை ரம்பாவின் சகோதரர், வெங்கடேஷ்வர ஸ்ரீனிவாசராவ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அரசியல் தலைவர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
தனி விமானத்தில் பயணம்
தற்போது இந்த வழக்கில் நடிகை தமன்னாவுக்கு தொடர்பிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்காக நடிகை தமன்னா விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மோசடி பணத்தில் நடிகை தமன்னா நடத்திவரும் ஒய்ட் அண்ட் கோல்ட் நிறுவனம் சுமார் 300 கிலோகிராம் தங்கம் வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, இந்த வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் நாயுடு என்பவருடன், தமன்னா தனி விமானத்தில் பயணம் செய்த புகைப்படம் சமீபத்தில் வைரலாகியது.
இதனால் இந்த மோசடியில் தமன்னாவுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கு தொடர்பில் மேலும் பல பிரபலங்கள் கைது செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.