40 பௌத்த பிக்குகளைக் கொண்டு போதைப் பொருள் கடத்த முயற்சி ; விசாரணையில் அம்பலமான பல தகவல்கள்

Sri Lanka Police Crime Drugs
By Sahana Apr 28, 2026 01:23 AM GMT
Report

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு 110 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களைக் கடத்தி வந்த நிலையில், கைதான பிக்குமார் தொடர்பில் விசாரணையில் முக்கியமான பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

வைத்தியருக்கும் பெண்ணுக்கும் இடையில் நடந்த வாக்குவாதம் ; வெளியாகும் பல ஆதாரங்கள்

வைத்தியருக்கும் பெண்ணுக்கும் இடையில் நடந்த வாக்குவாதம் ; வெளியாகும் பல ஆதாரங்கள்

இந்த போதைப்பொருட்களை கடத்திவந்த 22 பிக்குகள் நேற்றுமுன்தினம் (26) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து காவல்துறை போதைப்பொருள் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

40 பௌத்த பிக்குகளைக் கொண்டு போதைப் பொருள் கடத்த முயற்சி ; விசாரணையில் அம்பலமான பல தகவல்கள் | 40 Buddhist Monks Revealed During Investigation

இவர்கள் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் நேற்றுமுன்தினம் (26) முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை ஏழு நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தநிலையில், காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில், இந்தப் போதைப்பொருள் கடத்தல் மிகவும் திட்டமிட்ட முறையில் பேஸ்புக் சமூக வலைத்தளம் வாயிலாக ஒருங்கிணைக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

அதன்படி, பிலியந்தலை - மடபாத்த பகுதியில் உள்ள விஹாரையொன்றைச் சேர்ந்த மூன்று பிக்குகள், ஏனைய பிக்குகளைச் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பு கொண்டு இந்த தாய்லாந்து பயணத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

கம்பஹா - மீகஹவத்த பகுதியில் கைது செய்யப்பட்ட பிக்கு ஒருவரிடம் நடத்திய விசாரணையில், அவர் இதற்கு முன்னரும் இரண்டு முறை போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்திருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பல் ; இலங்கை மாலுமியை மீட்க நடவடிக்கை

சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பல் ; இலங்கை மாலுமியை மீட்க நடவடிக்கை

கடந்த முறை போதைப்பொருள் கடத்தி வந்ததற்காக அவருக்கு 80 ஆயிரம் ரூபா பணம் கிடைத்துள்ளதோடு, அந்தப் போதைப்பொருள் அத்துருகிரிய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒப்படைக்கப்பட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த வீட்டை தேடி அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தக் கடத்தலின் பின்னணியில் தாய்லாந்தில் உள்ள ஒரு விஹாரையில் தங்கியிருக்கும் ஒரு இலங்கை பிக்கு செயற்பட்டுள்ளார் என்பதும் அவரே இந்தப் போதைப்பொருள் தொகுதியை இலங்கைக்குக் கொண்டு செல்வதற்காக வழங்கியுள்ளார் என்பதும் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள பிக்குகளில் மூவர், இதற்கு முன்னரும் இதே போன்று போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், மீகஹவத்த பகுதியில் கைதுசெய்யப்பட்ட பிக்கு நேற்று (27) நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 2 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் இந்த விவகாரத்தில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இருப்பினும், பிக்குகள் வெளிநாடு செல்வதற்கு முன்னர் மகாநாயக்க தேரர்களின் பரிந்துரை கடிதம் மற்றும் புத்தசாசன அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற விதிமுறை தற்போதைய அரசாங்கத்தில் நீக்கப்பட்டமை இவ்வாறான குற்றச் செயல்களுக்கு வழிவகுத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வெளிநாட்டு வேலை ஆசை பயன்படுத்தி மோசடி ; அதிரடியாக கைதான இரண்டு பெண்கள்

வெளிநாட்டு வேலை ஆசை பயன்படுத்தி மோசடி ; அதிரடியாக கைதான இரண்டு பெண்கள்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US