வைத்தியருக்கும் பெண்ணுக்கும் இடையில் நடந்த வாக்குவாதம் ; வெளியாகும் பல ஆதாரங்கள்
நிலத்தகராறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரியவிளான் பகுதியில் நில உரிமை தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், குறித்த நிலத்தை தூய்மைப்படுத்தும் பணியில் தனது பணியாளர்களுடன் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த இரண்டு பெண்கள், நிலத்தின் ஒரு பகுதி தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், எம்.பி. அர்ச்சுனா தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து பெண்களை நோக்கி காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவம் தொடர்பாக விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர் பின்னர் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விடயம் தொடர்பில் மேலும் இந்த காணொளி மூலம் காணலாம்.....