தவணையில் வீடு கட்டித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி ; பொலிஸாரிடம் சிக்கிய சந்தேகநபர்
தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் புதிய திருப்பம் ; இந்தியாவில் கைது செய்யப்பட்ட இருவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்
இரண்டு நிறுவனங்களை நடத்தி வந்ததாகக் கூறப்படும் குறித்த சந்தேகநபர், இலகுவான தவணை முறையில் வீடுகளை நிர்மாணித்துத் தருவதாகக் குறிப்பிட்டு, முகநூல் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விளம்பரங்களை நம்பிய பலர், வீடுகளை நிர்மாணிப்பதற்காக சந்தேகநபரின் நிறுவனங்களுக்கு பணம் செலுத்தியுள்ளனர்.
எனினும், பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் வாக்குறுதியளித்தபடி வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்காமல், பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணைகளின் அடிப்படையில், குறித்த சந்தேகநபர் மிரிஹான சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் ஊடாக இடம்பெற்றதாகக் கூறப்படும் பணப் பரிமாற்றங்கள் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலும், மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் மொத்த பணத் தொகை தொடர்பிலும் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.