செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய் தற்போது செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இவர் ஜூன் 21 ஆம் திகதி ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார்.

இந்த ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரனின் ராசிக்கு செவ்வாய் செல்வதால் அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இப்போது செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். புதிய நட்புகள் கிடைக்கும். அந்த நட்புகளால் எதிர்காலத்தில் நல்ல நிதி ஆதாயங்களும், முன்னேற்றத்தையும் காணக்கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.

கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இப்பெயர்ச்சியானது ஒரு திருப்புமுனையாக இருக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். இதன் மூலம் வங்கியில் இருப்பு அதிகரிக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு பாராட்டப்படும். புதிய வருமான வழிகள் உருவாகும். நிதி நிலை உயரும். இருப்பினும் செலவைக் கட்டுப்படுத்த பட்ஜெட் போட்டு செலவு செய்வது நல்லது.

தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக சந்தித்து வந்த பண கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். மேலும் சிக்கியிருந்த பணம் திடீரென்று கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் கிடைக்கலாம். அதோடு, சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆற்றல் அதிகரிக்கும். பணியிடத்தில் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். ஆனால் இக்காலத்தில் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். பொறுமையை கையாண்டால், சூழ்நிலைகள் சாதகமாக மாறும். இக்காலத்தில் புதிய முதலீடுகளை செய்தால், நல்ல லாபத்தைப் பெறலாம்.
