நண்பரின் 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறை

Vavuniya Sexual harassment Court of Appeal of Sri Lanka
By Sahana Aug 10, 2026 08:04 PM GMT
Report

நண்பரின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட 36 வயதுடைய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.

கனடாவில் டொராண்டோ திரைப்பட விழா ; உலகத் தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கு அழைப்பு

கனடாவில் டொராண்டோ திரைப்பட விழா ; உலகத் தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கு அழைப்பு

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும், 2 இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராதமாக செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தாயினால் கைவிடப்பட்ட நிலையில், தந்தையின் பராமரிப்பில் வசித்து வந்த 11 வயதுடைய சிறுமியே குறித்த பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பரின் 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறை | Man Abused Girl Sentenced To 40 Years In Prison

சிறுமியின் தந்தையின் நண்பரான 36 வயதுடைய குறித்த நபரே இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் 2016ஆம் ஆண்டு வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் பீ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வழக்கு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, குறித்த நபருக்கு எதிராக 2025ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும், வழக்கு நடவடிக்கைகளின் போது குறித்த எதிரி தலைமறைவாகியிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, எதிரி இன்றிய நிலையில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டது.

வழக்கு விசாரணையின்போது அரச சட்டவாதியினால் நெறிப்படுத்தப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணங்களை ஆராய்ந்த நீதிமன்றம், குறித்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானித்தது.

இதனையடுத்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, குறித்த எதிரிக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

நண்பரின் 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறை | Man Abused Girl Sentenced To 40 Years In Prison

அத்துடன், பாலியல் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், 2 இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராதமாக செலுத்துமாறும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்டனைத் தீர்ப்பை வழங்கியபோது, வழக்கு நடவடிக்கைகளின்போது எதிரி தலைமறைவாகியிருந்தமை, குறித்த சம்பவத்தினால் சிறுமிக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் கடுமையான உடல் மற்றும் உள பாதிப்புகள், அத்துடன் சமூகத்தில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் ஆகியவற்றை நீதிமன்றம் கவனத்தில் கொண்டதாக நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நீதித்துறை கடுமையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் இந்தத் தீர்ப்பு எடுத்துக்காட்டுவதாக குறிப்பிடப்படுகிறது.

இவ்வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ வழக்கை நெறிப்படுத்தியிருந்தார்.

சாகர காரியவசம் பிணையில் விடுவிப்பு

சாகர காரியவசம் பிணையில் விடுவிப்பு

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US