வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் முக்கிய கலந்துரையாடல்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, அந்தப் பகுதிகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு தற்போது காணப்படும் முக்கிய பிரச்சினைகளை அடையாளம் காண்பதே இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கு எதிர்க்கட்சி என்ற வகையில் தேவையான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் சமூகப் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் தாம் நேரடியாக தலையிடுவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.