சனி - சந்திரன் சேர்க்கை ; கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் கிரக சேர்க்கையால் உருவாகும் யோகங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நேர்மறையான அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் நீதிமான் சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த மீன ராசிக்குள் சந்திரன் ஜூன் 09 ஆம் திகதி நுழையவுள்ளார்.
இதன் விளைவாக மீன ராசியில் சனி மற்றும் சந்திரனின் சேர்க்கையால் விஷ யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் ஒரு அசுப யோகமாகும். இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் ஆரோக்கிய பிரச்சனைகளையும், பண பிரச்சனைகளையும் சந்திக்கவுள்ளனர்.
இப்போது மீன ராசியில் உருவாகும் விஷ யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகவுள்ளது. இதனால் மிகுந்த மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். அதோடு மனம் அமைதியிழந்து இருக்கும். மேலும் திடீர் நிதி இழப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால், பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அதுவும் 40 வயதிற்கு மேற்பட்டபவர்கள் ஆரோக்கியத்தைப் புறக்கணிக்கக்கூடாது. சிறு பிரச்சனை என்றாலும், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இந்த காலத்தில் பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம். விஷ யோகத்தின் மோசமான விளைவுகளை தவிர்க்க ஹனுமான் சாலிசாவைத் தவறாமல் பாராயணம் செய்யுங்கள்

துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகவுள்ளது. இதன் விளைவாக இக்காலத்தில் எதிரிகள் சுறுசுறுப்பாக இருந்து, வேலைகளில் இடையூறை ஏற்படுத்தலாம். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சளி தொல்லையால் சிரமப்படக்கூடும். நிதி விஷயங்களில் அவசரமாக முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பயணங்களை மேற்கொள்ளும் போது உடைமைகளில் கவனமாக இருக்க வேண்டும். விஷ யோகத்தால் சந்திக்கும் மோசமான விளைவுகளைத் தவிர்க்க துர்கா தேவியை வழிபடுங்கள்.

கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகவுள்ளது. இதனால் தேவையற்ற செலவுகள் அதிகரித்து பட்ஜெட் பாழாகும். நிதி நிலைமை சிறப்பாக இருக்க செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் தேவையில்லாத வாக்குவாதத்தை ஏற்படுத்தும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. விஷ யோகத்தால் சந்திக்கும் மோசமான விளைவுகளைத் தவிர்க்க சிவபெருமானை வழிபாடு செய்யுங்கள்.
