வாகனத்திலிருந்து விலகிய கல் தாக்கி காயம் ; சிகிச்சை பலனின்றி யாழ் இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் காலில் ஏற்பட்ட கண்டல் காயத்திற்குச் சிகிச்சை பெற்று வந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கண்டல் காயம்
யாழ்ப்பாணம், இடைக்காட்டைச் சேர்ந்த குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வீதியில் சென்றுகொண்டிருந்தபோது வாகனம் ஒன்றிலிருந்து விலகிய கல் ஒன்று இளைஞனின் காலில் பலமாகத் தாக்கியுள்ளது.
இதனால் காயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது, காலில் ஏற்பட்ட கண்டல் காயத்தைக் கரைப்பதற்கான சிகிச்சை முயற்சிகளை வைத்தியர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர்.
எனினும், குறித்த கண்டல் இரத்த நாளத்தில் அடைப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.