சாட்டி மாவீரர் துயிலும் இல்ல வழக்கு; ஊர்காவற்றுறை நீதிமன்றம் தள்ளுபடி
யாழ்ப்பாணம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் எதிர்வரும் மாவீரர் தின நினைவேந்தலை நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி ஊர்காவற்றுறை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று (20) தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வழக்கில் பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகளான கனகரத்தினம் சுகாஷ், பெலினா, ஸ்ரீராகவன், அஜித்சங்கர், கௌரிதரன், நிரோசன் மற்றும் மதிவதனி சூரியகாந்த் ஆகியோர் ஆஜராகினர்.

இதன்போது, இறந்தவர்களை நினைவுகூருவதற்கான உரிமையை எந்தவொரு சட்டத்தாலும் தடை செய்ய முடியாது என்றும், அந்த உரிமை அரசியலமைப்பிலும் சர்வதேச ரீதியிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்கள் அல்லது இலச்சினைகளைப் பயன்படுத்தாமல் நினைவேந்தலை நடத்துவது சட்டவிரோதமானது அல்ல என நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
சட்டத்தரணிகளின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நினைவேந்தலுக்குத் தடை கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது