இளம் பொலிஸ் அதிகாரி செய்த தவறான செயல் ; நீண்டகாலம் அரங்கேறிய சம்பவம் அம்பலம்
கொக்கெய்ன் மற்றும் குஷ் ஆகிய போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், பொலிஸ் விசேட பிரிவில் கடமையாற்றி விலகிய முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அநுராதபுரம் வலய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலய குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலியபுர பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தீவிர விசாரணை
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 23 கிராம் 600 மில்லிகிராம் குஷ் போதைப்பொருளும், 6 கிராம் 690 மில்லிகிராம் கொக்கெய்ன் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம், சாலியபுர - ஜெயந்தி கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர் கொழும்பில் உள்ள விசேட பொலிஸ் பிரிவொன்றில் கடமையாற்றியதுடன், பின்னர் பணிக்குச் செல்லாமல் சேவையிலிருந்து விலகியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் காதல் ; மாணவியை அடுத்தடுத்து பலாத்காரம் ; காதலன் உள்ளிட்ட நண்பர்கள் அரங்கேற்றிய கொடூரம்
நகரங்களை ஆராய்க அதன் பின்னர், இவர் நீண்டகாலமாக அநுராதபுரத்தின் பல பகுதிகளுக்குப் போதைப்பொருட்களை விநியோகிக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேக நபருக்கு போதைப்பொருட்களை வழங்கிய பின்னணி வலயமைப்பைக் கண்டறியும் நோக்கில் அநுராதபுரம் வலய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் பல கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.