சுதந்திர சதுக்கத்தில் பொலிஸார், சிவில் செயற்பாட்டாளர்கள் இடையே கருத்து முரண்பாடு
இலங்கையில் பல்வேறு முதலீட்டு நிறுவனங்களில் பொதுமக்கள் முதலீடு செய்த பணத்தை மீளப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி நாடளாவிய ரீதியில் 10 இலட்சம் கையெழுத்துகளைப் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சிவில் புலனாய்வு முன்னணியினால் திங்கட்கிழமை (05) கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கருத்து முரண்பாடு
மத்திய வங்கியினால் சில முதலீட்டு நிறுவனங்களின் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக, அவற்றில் முதலீடு செய்த பொதுமக்கள் தமது பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு முகங்கொடுத்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த நிறுவனங்களில் முதலீடு செய்ததாகக் கூறப்படும் முதலீட்டாளர்கள் தமது கணக்குகளை மீளச் செயற்படுத்தி, முதலீடு செய்த பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் மக்கள் மனுவில் கையெழுத்திட்டனர்.
இதன்போது மகென் ரட்டட்ட அமைப்பின் தலைவரும் சிவில் புலனாய்வு முன்னணியின் ஏற்பாட்டாளருமான சஞ்சய மஹவத்த உள்ளிட்ட சிலருக்கும் பொலிஸாருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.