தமிழர் பகுதியில் இளைஞரின் உயிரை பறித்த சம்பவம் ; பொலிஸாரின் பிடியில் ஒருவர்
வவுனியா, செட்டிக்குளம் - மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், அதே திசையில் மெனிக்பாம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த துவிச்சக்கரவண்டியும் ஒன்றோடொன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மேலதிக விசாரணை
இவ்விபத்தில் கடுமையான காயங்களுக்குள்ளான துவிச்சக்கரவண்டியில் பயணித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பெரியதம்பனை பகுதியைச் சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி செட்டிக்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.