கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்ட இளைஞன்; பொலிஸார் தீவிர விசாரணை
அநுராதபுரத்தில் இப்பலோகம பொலிஸ் பிரிவிலுள்ள ரணஜயபுர பாளுகுபுக்வெவ குளத்தில் இளைஞன் ஒருவனின் சடலம் இப்பலோகம பொலிஸாரால் நேற்றையதினம் (28) மாலை மீட்கப்பட்டுள்ளது.
யகல்ல வீதி, கெக்கிராவை பகுதியை வசிப்பிடமாக கொண்ட 29 வயதுடைய இளைஞனே சடலமாகன மீட்கப்பட்டுள்ளார்.

தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கொலைசெய்யப்பட்டு குளத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞன் 25 ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.
இதனையடுத்து மகனை காணவில்லை என இளைஞனின் தாயார் கெக்கிராவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த கெக்கிராவை நீதிமன்ற நீதிவானின் ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை இப்பலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.