தெய்வம் நின்று கொல்லும்; டக்லஸ் தேவானந்தாவின் பரிதாப நிலை!
பாதாள குற்றகுழுவிடம் மீட்கப்பட்ட துப்பாக்கி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிற கைதிகளுடன் சிறைசாலை வாகனத்தில் அடைக்கப்பட்டு கொண்டு செல்லப்படும் காணொளி வெளியாகியுள்ளது.

தமிழ் அரசியவாதிகளிடையே கிலி...
தமிழ் மக்கள் பலரின் கொலைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் பின்னரங்கில் நின்று அரங்கேற்றிய டக்ளஸ் தேவானந்தா, இன்று தானே கைதாகி சிறையில் வாடுகின்றார்.
அனுர அரசாங்கத்தின் அதிரடியின் முன்னாள் அரச தலைவர்களில் கைக்கூலிகளாக செயல்பட்ட , தமிழ் அரசியல் வாதிகளான பிள்லையான் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள நிலையில் தற்போது டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அடுத்து சிக்கபோவது யார் என்கின்ற பீதி தமிழ் அரசியவாதிகளிடையே கிலியை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
அதேவேளை கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிம்ன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பிரிவுக்கு உரித்தான துப்பாக்கியொன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.