செல்போனால் நொடிபொழுதில் நடந்த சம்பவம்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞன்!
உலகளவில் தற்போது கைப்பேசியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. இதனால் மனித உடலுக்கு பாதிப்புகள் ஏற்படும் என அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறானவொரு நிலையில், தற்போது இணையத்தில் உலா வரும் காணொளி, கைப்பேசி பயன்பாடு உயிருக்கே ஆபத்தாகவும் முடியும் என நிரூபித்து காட்டியுள்ளது.
குறித்த வீடியோவில் இளைஞன் ஒருவர் செல்போனை மும்முரமாக பார்த்தப்படி ரயில் கடவையை கடந்து செல்ல முயன்றார். அப்போது சில அடிகள் தூரத்தில் ரயில் நெருங்கி வந்துவிட்டது.
உடனே சுதாரித்து கொண்ட இளைஞன் ரயில் மோதுவதை தவிர்க்க ஓடமுயன்று தடுமாறி கீழே விழுந்தார். கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோ பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.