தாயுடன் சென்று கொண்டிருந்த மாணவனுக்கு நேர்ந்த துயரம்
கொழும்பு – அவிசாவளை ஹைலெவல் வீதியில் விறகுகளை ஏற்றிச் சென்ற லொறியிலிருந்து மரக்கட்டைகள் சரிந்து வீழ்ந்ததில், பாடசாலை மாணவன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் துன்னான சிறி சுமனஜோதி மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

விறகுகளைப் பாதுகாப்பற்ற முறையில் ஏற்றிச் சென்ற லொறி
மாணவன் தனது தாயுடன் வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
குருணாகல் பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி விறகுகளைப் பாதுகாப்பற்ற முறையில் ஏற்றிச் சென்ற லொறியிலிருந்தே, திடீரென விறகுகள் வீதியில் சரிந்து வீழ்ந்துள்ளன.
விபத்து நடந்த உடனேயே அருகில் இருந்தவர்கள் மாணவனை மீட்டு சிகிச்சைக்காகப் பாதுக்க பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.