துபாயிலிருந்து வந்திறங்கிய கொள்கலன்; படுக்கை விரிப்புகளுக்குள் சிக்கிய மர்மம்!
துபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட 3.38 மில்லியன் வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 2025 நவம்பரில் துபாயிலிருந்து வந்திறங்கிய சந்தேகத்திற்கிடமான கொள்கலன் (Container) ஒன்றைச் சோதனையிட்டபோது இந்த சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

507 மில்லியன் ரூபாய் பெறுமதி
இந்த சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகள் படுக்கை விரிப்புகள் என்ற என்ற பெயரில் பொதி செய்யப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி சுமார் 507 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டவிரோத இறக்குமதியால் அரசாங்கத்திற்கு சுமார் 460 மில்லியன் ரூபாய் வரி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த கொள்கலன் பத்தரமுல்ல பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் முகவரிக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை மேலதிக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.