ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் ; நடவடிக்கை எடுக்க கோரிய நெட்டிசன்கள்
இந்தியா - ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இளைஞர் ஒருவர் ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலதிக விசாரணை
2025 செப்டம்பர் 5, அன்று நடந்த இந்த மனிதாபிமானமற்ற செயலை உள்ளூர் மக்கள் வீடியோவாக பதிவு செய்து, கையும் களவுமாக சிக்கிய அந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், இவர் தனது இருசக்கர வாகனத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கானின் புகைப்படத்துடன் "நம்பர் 1 ரசிகன்" என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, நெட்டிசன்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி, குறித்த இளைஞன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் விலங்கு உரிமைகள் மற்றும் சமூக நீதி குறித்து பரவலான விவாதங்களை எழுப்பியுள்ளது.
பொலிஸார் இந்த விவகாரம் குறித்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.