அடுத்த விக்கெட் ; சேகர் பாபு மீது வழக்குப்பதிவு; சாக்கில் திமுக!
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட போது காவல்துறையினரை அவதூறாக பேசியதாகவும், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்பி கலாநிதி வீரசாமி உள்ளிட்ட 10 பேர் மீது இரண்டு பிரிவுகளின் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு சட்டவிரோதமாக அனுமதிகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தருவதாகக் கூறி ₹100 கோடிக்கு மேல் வசூலித்ததாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்பொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.

திமுகவைச் சேர்ந்த மேலும் 10 நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு
இந்தக் கைது நடவடிக்கையின்போது, சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள காவல் அலுவலகம் மற்றும் விசாரணை மையத்தின் முன் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருமளவில் திரண்டனர்.
அப்போது பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர் பாபு மற்றும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காவல் துறையினரைப் பணி செய்யவிடாமல் தடுத்து இடையூறு ஏற்படுத்தியதாகவும், அரசு அதிகாரிகளுக்கு எதிராக அவதூறான சொற்களைப் பேசியதாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சம்பவ இடத்தில் பதிவான காணொளிகள் மற்றும் காவல் துறையினரின் புகாரின் அடிப்படையில் துரித விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி. மற்றும் திமுகவைச் சேர்ந்த மேலும் 10 நிர்வாகிகள் மீது சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.