இஸ்ரேல் தேர்தல்; வாக்கு எண்ணும் பணிகள் மும்மரம்; முன்னிலையில் நெதன்யாகு!
இஸ்ரேலில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தேர்தலில், இதுவரை 72 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, நெதன்யாகு தலைமையிலான அணி 54 இடங்களிலும், ஐசென்கோட் தலைமையிலான அணி 48 இடங்களிலும், அரபு கட்சிகள் 18 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

இதுவரை எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மை பெற்றதில்லை
தனிப்பட்ட கட்சிகள் பெற்றுள்ள இடங்களின் விவரம் வருமாறு, லிகுட் – 27, யாஷார் – 21, ஜாயின்ட் லிஸ்ட் – 12, டுகெதர் – 11, டெமாக்ராட்ஸ் – 8, இஸ்ரேல் பெய்டெய்னு – 8, யுனைடெட் தோரா ஜூடாயிசம் – 7, ஷாஸ் – 7, ஜூவிஷ் பவர் – 7, ரிலிஜியஸ் சியோனிசம் மற்றும் ஜெஹுத் – 6, ராம் – 6. இஸ்ரேலில் பெரும்பான்மை கூட்டணியை உருவாக்க கட்சிகள் ஒன்றிணைகின்றன.
இதுவரை எந்தவொரு கட்சியும் தனிப்பெரும்பான்மை பெற்றதில்லை.எனவே, அந்நாடு எப்போதும் கூட்டணி அரசாங்கங்களாலேயே ஆளப்பட்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது.
அதேவேளை இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்து வெளியான கருத்துக் கணிப்புகள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் எதிர்காலம் பெரும் சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ளதைக் காட்டுகின்றன.
120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 61 இடங்கள் தேவை என்ற நிலையில், நெதன்யாகுவின் ஆளும்கட்சி கூட்டணி 50 இடங்களை மட்டுமே பெறும் என முன்னணி ஊடகங்களான சேனல் 13, சேனல் 12 மற்றும் கான் ஆகியவை கணித்துள்ளன.