முல்லைத்தீவில் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம்; பொலிஸார் பகீர் தகவல்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிசார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் அதிகளவான ஐஸ் போதைப்பொருளை உட்கொண்ட காரணத்தால் இளைஞன் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த (22) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தமிழர் பிரதேசத்தில் இரவோடிரவாக காணி பிடிப்பு; திடீரென முளைத்த கடைகள்; அரச உத்தியோகஸ்தர்களுக்கு மிரட்டல்!
அதிகளவான போதைப்பொருள் பாவனை
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் 10 ஆம் வட்டாரம் எனும் இடத்தில் நண்பர்கள் மூவர் ஐஸ் போதைப்பொருள் பாவித்து வந்துள்ளார்கள்.
இதில் ஒருவர் அதிகளவான ஐஸ் போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் மயங்கி விழுந்ததை அடுத்து ஏனைய இருவரும் அப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளார்கள்.
இதனையடுத்து பற்றைகாட்டுக்குள் ஒருவர் மயங்கி கிடப்பதாக தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் மயங்கிய நிலையில் உள்ளவரை மீட்டு புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றுபோது அங்கு அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது,
சம்பவத்தில் 23 வயதுடைய 10ம் வட்டாரத்தினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
. அதேவேளை புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் அதிகளவான போதைப்பொருள் பாவனை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றதாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.