அக்குரேகொட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ; மக்களின் உதவியை நாடிய பொலிஸார்
தலங்கம காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்கு காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
மேலதிக விசாரணை
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்ட சந்தேக நபரின் உடல் அடையாளங்கள் உயரம்: சுமார் 5 அடி 5 அங்குலம் வயது: சுமார் 44 வயது தோற்ற அமைப்பு:

கறுப்பு நிறத்தவர், மஞ்சள் கலந்த பழுப்பு நிற கண்கள் கொண்டவர். விசேட அடையாளம்: வலது பக்கக் கன்னத்திற்கு கீழே தழும்புடன் கூடிய வெட்டுக் காயம் ஒன்று காணப்படுகிறது.
சந்தேக நபர் தற்போது இருக்கக்கூடிய பல்வேறு தோற்றங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காவல்துறை தயாரித்துள்ளது.
இந்த நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் இலக்கங்களுக்கு உடனடியாக அறிவிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது:
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர்: 071-8598008
நுகேகொடை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி: 071-8591641
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு பணிப்பாளர்: 071-8592279
பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் இரகசியமாகப் பேணப்படும் என காவல்துறை உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.