கனேமுல்ல சஞ்சீவ கொலைக்கு முன் இஷாரா செவ்வந்தியிடம் உதவிகோரிய பெண் யார்?
கனேமுல்ல சஞ்சீவ கொலைவழக்கில் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, தற்போது கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
இந் நிலையில், அவர் விசாரணையின் போது கூறிய விடயங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இதனடிப்படிடையில், '
கணவனால் துன்புறுத்தல்
'கனேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உதவ சட்டத்தரணிபோல சட்டப்புத்தகத்துடன் நான் அன்று நீதிமன்றம் சென்றேன். அப்போது அங்கே ஒரு ஏழைப்பெண் என்னிடம் வந்து அவருக்கு சட்ட உதவி தர முடியுமா? என்றார்.
என்னை அவர் சட்டத்தரணியாக நினைத்துவிட்டார். கணவனால் துன்புறுத்தல் என்று அவர் வழக்கொன்றுக்காக வந்திருந்தார்.சட்டத்தரணிக்கு வழங்க எப்படியோ ஆயிரம் ரூபாவை சேகரித்து வந்துள்ளதாக அவர் என்னிடம் கூறினார்.
அதனை நான் கேட்டு மிகவும் கவலையடைந்தேன். சட்டத்தரணிகள் ஓய்வு அறையில் நான் இருந்தேன். எனவே அங்கிருந்த இன்னுமொரு பெண் சட்டத்தரணியை காட்டி அவரிடம் செல்லுமாறு அந்த பெண்மணியிடம் சொன்னேன்.
அப்படியாக அங்கு சென்ற அந்த பெண்மணி நான் காட்டிய சட்டத்தரணி 2 ஆயிரம் ரூபாவை தருமாறு கோருவதாக என்னிடம் வந்து கூறினார். எனது மனம் மேலும் நெகிழ்ந்தது.
எனவே அந்த ஏழைப்பெண்மணியை வெளியில் அழைத்துவந்து அவர் கையில் ஐயாயிரம் ரூபா நோட்டை வழங்கினேன். இது துப்பாக்கிச் சூடு நடக்க முதல் இடம்பெற்றது என இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.