அதிரடி ஆட்டத்தில் இங்கிலாந்தை முறியடித்த மேற்கிந்திய தீவுகள்
உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய (11) போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 30 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது இதன்படி முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ரதபோர்ட் 42 பந்துகளில் 76 ஓட்டங்களை அதிரடியாக விளாசி அணிக்கு வலுசேர்த்தார்.
இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் ஜெமி ஓவர்டன் மற்றும் ஆதில் ராசிட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இந்நிலையில்197 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.