தனிப்பட்ட தகராறு காரணமாக பெண் கொலை ; சந்தேகநபர் தப்பி ஓட்டம்
மொனராகலை வெல்லவாய காவல்துறை பிரிவிற்குட்பட்ட நெட்டொலகம பகுதியில் நேற்று (14) மாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணை
பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய காவல்நிலையத்துக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்த பெண்ணை மீட்டு வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் முன்னரே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர் வெல்லவாய - நெட்டொலகம பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது சட்டபூர்மற்ற கணவருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு முற்றியதே இந்த கொலைக்கு காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தற்போது பிரதேசத்திலிருந்து தப்பியோடியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லவாய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.