குடும்ப வன்முறையில் பறிபோன 23 வயது பெண்ணின் உயிர்
கெஸ்பேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடபாத பகுதியில் நேற்று வியாழக்கிழமை (13) இரவு பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பொல்ஹேன பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றிய நிலையில், கணவரால் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கெஸ்பேவா பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.