அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும் ஆடிப்பூரம் இன்று; பெண்கள் இதை செய்ய மறக்காதீர்கள்!
ஆடி மாதத்திலேயே அம்பாளுக்கு மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பூரம். இந்த ஆண்டு ஆடிப்பூரம் இன்று ( 14)கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாவாகும். ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள் என்கின்றன புராணங்கள். ஆண்டாள் அவதார நட்சத்திரமும் ஆடிப்பூரம்தான்.

அம்மனுக்கு வளைகாப்பு
பொதுவாக ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாளாக பார்க்கப்படுகிறது.
ஆடிப்பூரம் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது அம்பாளுக்குரிய திருநாளாகும். இந்த நாளில்தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு.

உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை தொடங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. ஆடிப்பூரத்தை ஆண்டாள் ஜெயந்தியாகவும் 10 நாள் உற்சவமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் ஆடிப்பூரத்தின் போது அம்மன் கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு விழா நடத்துவார்கள்.

இந்த ஆடிப்பூரத்தில் அம்பாளின் அருளை பெற ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும்.
பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும் என்பது நம்