தமிழர் பகுதியொன்றில் குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த கதி ; பற்றைக்காட்டுக்குள் கணவருக்கு காத்திருந்த ஷாக்
மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கணவருடன் மாடுகளைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தபோதுச் பற்றைக்காட்டுக்குள் பெண்ணொருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி கடந்த 09தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சேர்ந்த 59 வயதுடையவர் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுவந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காட்டு யானை தாக்குதல்
கடந்த 05.11.2026ஆம் திகதி மாலை சுமார் 5.30 மணியளவில், குறித்த பெண் தனது கணவருடன் மாடுகளைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தபோது, அப்பகுதிக்கு வந்த காட்டு யானை இருவரையும் துரத்தியுள்ளது.
இதன்போது குறித்த பெண்ணைத் தாக்கிய யானை, அவரைப் பற்றைக்காட்டுக்குள் தூக்கி வீசிவிட்டுச் சென்றுள்ளது. யானையிடமிருந்து தப்பித்துக் கொண்ட கணவர், பின்னர் மனைவியைத் தேடிச் சென்றபோது பற்றைக்காட்டுக்குள் இருந்து அவரது சத்தம் கேட்டுள்ளது.
இதனையடுத்து, கிராம மக்களின் உதவியுடன் அவர் உடனடியாக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், வெள்ளிக்கிழமை (13) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.