18 மாதங்களில் 3,769 கோடி ரூபாய் கிரிப்டோகரன்சி திருட்டு ; FBI எச்சரிக்கை
போலி வீடியோ அழைப்புகள் மூலம் சுமார் 400 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 3,769 கோடி ரூபாய்) பெறுமதியான கிரிப்டோகரன்சியைத் திருடி வடகொரிய ஹேக்கர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவின் FBI தெரிவித்துள்ளது.
தலையில் 14 தையல்கள் ; உயிருக்கு அச்சுறுத்தல் எனக் கூறும் சத்தரதன தேரர் ; ஜனாதிபதியிடம் அவசரக் கோரிக்கை
நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களைப் போன்று ஆள்மாறாட்டம் செய்து போலி வீடியோ அழைப்புகளை மேற்கொள்வதன் மூலம் இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 18 மாதங்களில் சுமார் 900 பேரை இலக்குவைத்து, 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய கிரிப்டோகரன்சியை ஹேக்கர்கள் திருடியுள்ளதாக FBI தகவல் வெளியிட்டுள்ளது.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இத்தகைய இணையவழி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.